உண்பதற்குத் தமிழில் வழங்கப்படும் வேறு பல சொற்கள் தமிழன் அறுசுவை உணவை சமைக்க மட்டு்ம் தெரிந்து வைத்திருக்கவில்லை. அவற்றை எவ்வாறு உண்ண வேண்டும் என்பதையும் தெரிந்து அதற்கு அழகிய தமிழ் சொற்களை வகைப்படுத்தி வைத்திருந்தான். இதோ அச் சொற்கள் அருந்தல் , உண்ணல், உறிஞ்சல், குடித்தல், தின்றல், துய்த்தல், நக்கல், நுங்கல், பருகல், மாந்தல், மெல்லல், விழுங்கல் இச்சொற்களை நாம் அன்றாடம் பயன் படுத்திக்கொண்டு தான் உள்ளோம். ஆனால் இவற்றை சரியான இடங்களில்தான் பயன்படுத்துகிறோமா என்பதை அறியாமலே நாம் பேசுகிறோம். ஒவ்வொரு சொற்களும் அதன் தன்மைக்கேற்ப வழங்கப்படுவது தமிழின் சிறப்பு. இங்கு உண்பதற்கு வழங்கப்படும் சொற்கள் பயன்படுத்தும் முறையினையும் சுட்டியுள்ளேன். அருந்தல் = மிகச் சிறிய அளவே உட்கொள்ளுதலை இச்சொல் குறிக்கும் (உ-ம்: "மருந்து அருந்தினான்'). உண்ணல் = "துற்றல்' எ...
Comments
Post a Comment