உண்பதற்குத் தமிழில் வழங்கப்படும் வேறு பல சொற்கள்
தமிழன் அறுசுவை
உணவை சமைக்க மட்டு்ம் தெரிந்து வைத்திருக்கவில்லை. அவற்றை எவ்வாறு உண்ண வேண்டும் என்பதையும்
தெரிந்து அதற்கு அழகிய தமிழ் சொற்களை வகைப்படுத்தி வைத்திருந்தான்.
இதோ
அச் சொற்கள்
அருந்தல் , உண்ணல்,
உறிஞ்சல், குடித்தல், தின்றல், துய்த்தல், நக்கல், நுங்கல், பருகல், மாந்தல், மெல்லல்,
விழுங்கல்
இச்சொற்களை நாம் அன்றாடம் பயன்
படுத்திக்கொண்டு தான் உள்ளோம். ஆனால் இவற்றை சரியான இடங்களில்தான் பயன்படுத்துகிறோமா
என்பதை அறியாமலே நாம் பேசுகிறோம். ஒவ்வொரு சொற்களும் அதன் தன்மைக்கேற்ப வழங்கப்படுவது
தமிழின் சிறப்பு. இங்கு
உண்பதற்கு
வழங்கப்படும் சொற்கள் பயன்படுத்தும் முறையினையும் சுட்டியுள்ளேன்.
அருந்தல்
= மிகச் சிறிய அளவே உட்கொள்ளுதலை இச்சொல் குறிக்கும்
(உ-ம்:
"மருந்து அருந்தினான்').
உண்ணல்
= "துற்றல்' என்றும் கூறப்படும். இச்சொல் பசி தீர
உட்கொள்ளுவதைக் குறிக்கும் (உ-ம்: "வயிறார
உண்டான்').
உறிஞ்சல்
= வாயைக் குவித்துக் கொண்டு நீயற் பண்டத்தை ஈர்த்து
உட்கொள்வதை
இச்சொல் குறிக்கும் (உ-ம்: "தாமரைத் தண்டு
கொண்டு நீரை உறிஞ்சினான்').
குடித்தல்
= நீயல் உணவைச் சிறிது சிறிதாகப் பசி நீங்க உட்கொள்வதை
இச்சொல்
குறிக்கும் (உ-ம்: "கஞ்சி குடித்தான்; கூழ் குடித்தான்').
தின்றல்
= திற்றி என்றும் கூறப்படும் இச்சொல் கொறித்தலையும் அஃறிணை
உயிர்கள்
தீனி கொள்வதையும் குறிக்கும் (உ-ம்: "முறுக்குத்
தின்றான்').
துய்த்தல்
= சுவைத்து மகிழ்ந்து உட்கொள்வதை இச்சொல் குறிக்கும் (உ-ம்:
பல்சுவைப்
பண்டம் துய்த்தான்).
நக்கல்
= நாக்கினால் துளாவி உட்கொள்வதை இச்சொல் குறிக்கும் (உ-ம்:
தேனை வழித்து நக்கினான்).
நுங்கல்
= முழுவதையும் ஒரு வாயில் ஈர்த் துறிஞ்சி விரைந்து
உட்கொள்ளுவதை
இச்சொல் குறிக்கும் (உ-ம்: "நூறு குடம் கள்
நுங்கினான்').
பருகல்
= நீயற் பண்டத்தைச் சிறுகக் குடிப்பதை இச்சொல் குறிக்கும் (உ-ம்:
"நீர்
மோர் பருகினான்').
மாந்தல்
=பெரு வேட்கையுடன், மடமடவென்று உட்கொள்வதை இச்சொல்
குறிக்கும் (உ-ம்: "வந்தன எல்லாம் மாந்தி வளர்பசியோங்க நின்றான்.').
மெல்லல் = கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்வதை
இச்சொல் குறிக்கும் (உ-ம்: சீடையை மென்று தின்றான்).
விழுங்கல் = பல்லுக்கும் நாக்கிற்கும் வேலையே இன்றித் தொண்டை வழி
குபுக்கென்று உட்கொள்வதை இச்சொல் குறிக்கும் (உ-ம்: "மாத்திரை விழுங்கினான்').
Comments
Post a Comment