
திங்களைப் பாம்பு விழுங்கியது பண்டைய தமிழர்கள் கலைகள் பண்பட்டில் மட்டுமல்ல விண் வெளி அறிவியலிலும் சிறந்து விளங்கினர். இந்தக் கூற்றை முன் வைக்க பலரும் கோவிலில் உள்ள ஒன்பது கோள்களையும் அமாவாசை நிகழ்வினைச் சான்றாக முன்வைப்பர். ஆனால் நான் இதை புதிய சில விளக்கங்களோடு உங்களுக்கு விளக்க ஆவல் கொள்கிறேன். திருமால் பாற்கடலில் பள்ளிக் கொண்டிருப்பதாக நம் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்தே கூறி வருகின்றனர். பாற்கடல் என்ற கடல் ஒன்று உள்ளதா ? பாற்கடல் என்பதைப் பிரித்தால் பால் + கடல் என்று பொருள் வரும். பால் கடலில் திருமால் உறங்கிக் கொண்டு இருக்கின்றாறே? வீட்டில் வைக்கின்ற பாலே கெட்டு விடுகிறது. பால் கடல் கெட்டு, மோராகி தயிராகிவிடாதா ? அது வாடையடிக்காதா என்று இன்றைய வாண்டுகளே கேள்விகளுக்கு மேல் கேள்விகள...