Posts

Showing posts from April, 2015
Image
      உணவாக்கல்                ஒவ்வொரு உணவையும் ஒவ்வொரு விதமாக சமைத்தல் வேண்டும். தமிழர்கள் உணவுகளை விதம் விதமாகச் சமைக்கின்ற வல்லமை உள்ளவர்கள் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஆனால் உங்களுக்குச் சொல்வதற்கு ஒரு செய்தி இருக்கிறது.   உணவை சமைக்கின்ற விதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயரினை இட்டு வழங்கியுள்ளனர் நம் முன்னோர்கள்.   இங்கு சமைக்கின்ற முறையும் அதற்கு வழங்கப்படும் பெயர்களையும் கொடுத்துள்ளேன். அவித்தல்   - ஆவியால் வேகச் செய்வது இது. இது மூவகையாகும். குழாய் முதலியவற்றுள் செலுத்தி பிட்டு முதலியன அவிப்பது பெய்தவித்தல் என்றும் முகந்து இட்டு, இட்லி போன்றவற்றை அவிப்பது இட்டவித்தல் என்றும் கட்டை, துணித் துளைகளின் வழிப்பிழிந்து இடியாப்பம் போன்றவற்றை அவிப்பது பிழிந்தவித்தல் என்றும் சொல்லப்படும். இடித்தல் - அசி முதலியவற்றை மாவாகவோ அன்றி அவலாகவோ இடித்து ஆக்குவது இடித்தல் என்று சொல்லப்படும். கலத்தல் - பல பண்டங்களைக் கலந்து நீர்மோர் போன்றவற்றை ஆக்குவது கலத்தல் என்று சொல்லப்படும். கா...